புற்றுநோயாளிகள் சிரித்தால் மட்டுமே முகத்தை காட்டும் விசித்திர கண்ணாடி!

lets-design-with-mirrors-L-8rryVk

புற்றுநோயாளிகளுக்காகவே நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முகம் பார்க்கும் கண்ணாடியை துருக்கியைச் சேர்ந்த பெர்க் இல்ஹான் என்பவர் உருவாக்கியிருக்கிறார். இந்த கண்ணாடி சிரித்தால் மட்டுமே முகத்தை காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. டேப்லட் போலவே இருக்கும் இந்தக் கருவியில் கண்ணாடியும் கேமராவும் பொருத்தப்பட்டிருக்கின்றன. முக உணர்ச்சிகளை கண்காணித்துக்கொண்டிருக்கும். சிரித்தவுடன் சட்டென்று கண்ணாடியில் முகத்தைக் காட்டும். சிரிக்கவில்லை என்றால் கண்ணாடியில் முகம் தெரியாது. வழக்கமான கண்ணாடி போலவே சுவரில் மாட்டலாம், மேஜையில் வைக்கலாம். ரூ.1.2 லட்சத்திலிருந்து ரூ.1.94 லட்சம் வரை பல விதங்களில் இந்தக் கண்ணாடிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இந்த கண்டுபிடிப்பு குறித்து பெர்க் இல்ஹான் கூறுகையில், எந்தக் கஷ்டம் வந்தாலும் அதைக் கண்டு துவண்டு போகாமல், நம்பிக்கையோடும் புன்னகையோடும் எதிர்கொண்டால் நோய் விரைவில் குணமாகலாம். அல்லது மரணமாவது தள்ளிப் போகலாம். நியூயார்க்கில் படிப்பை முடித்தவுடன் சில புற்றுநோய் மருத்துவமனைகளுக்குச் சென்று ஆய்வு நடத்தினேன். சிரிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும் ஆயுளும் அதிகரிக்கும் என்பதை அறிந்துகொண்டேன். புற்றுநோயாளிகளிடமும் மருத்துவர்களிடமும் பேசினேன். 2 ஆண்டுகள் கடுமையாக உழைத்து, சிரித்தால் முகம் காட்டும் கண்ணாடியை உருவாக்கினேன் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Response