நீட் தேர்வு குறித்து பிரதமரை சந்திக்க சென்ற தமிழக அமைசசர்கள்!

neet12

”நீட் தேர்விலிருந்து தமிழகத்தை விலக்களிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். இதற்கான மசோதாக்களை நிறைவேற்றுவது குறித்து பேச்சு வார்த்தை நடந்தது. நீட் தேர்வுக்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதால் இது இந்திய மருத்துவ கழகம் முடிவெடுக்க வேண்டிய விஷயம். அதுமட்டுமில்லாமல் எல்லா மாநிலங்களும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட 5 லட்சம் மாணவர்களுக்கு நியாயம் கிடைக்க மத்திய அரசு கண்டிப்பாக உதவும் என்ற நம்பிக்கை தெரிவித்தார். நீட் தேர்வு தொடர்பான மசோதாக்களை நிறைவேற்ற குடியரசு தலைவரிடம் ஒப்புதல் பெறுவது பற்றியும் பேசினோம்” என்றார்.

மாநிலங்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் தமிழக அமைச்சர்கள் பி.தங்கமணி , டி.ஜெய்குமார், சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகன், டாக்டர்.சி. விஜய பாஸ்கர் ஆகியோர் மத்திய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை நேரில் சந்தித்தனர். மேலும் இவர்களுடன் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிஷ்ணன் இருந்தார் .

modiii

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கக் கோரி புது டெல்லியில் பிரதமரை சந்தித்த பின் மாநிலங்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

Leave a Response