அருள்நிதியின் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’

iravu
அறிமுக இயக்குனர் மு.மாறன் இயக்கும் படம்தான் “இரவுக்கு ஆயிரம் கண்கள்”. இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரங்களில் அருள்நிதியும், மகிமா நம்பியாரும், நடிகின்றனர்.

இப்படத்தில் கோ படத்தில் எதிர்மறை கதாப்பாத்திரத்தில் நடித்த அஜ்மல் அவருடன் ஆனந்தராஜ் ஆகிய இருவரும் முக்கிய கதாபத்திரத்தில் நடிகின்ற்னர். “ஆக்சஸ் பிலிம் பாக்ட்ரி” நிறுவனர் ஜி டில்லி பாபு இப்படத்தை தயாரிகிறார். இப்படத்தின் இசையை விசால் சந்திரசேகர் இசையமைகிறார்.

“பொதுவாகவே இரவை விட பகலுக்கு தான் அதிக விழிகள் இருக்கிறது என்று நாம் அனைவரும் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் ‘இரவுக்கு’ தான் ‘ஆயிரம்’ ‘கண்கள்’ இருக்கின்றது. படத்திற்கும், இரவுக்கும், நடைபெறும் பல மர்மங்களுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருப்பதால், இந்த படத்திற்கு “இரவுக்கு ஆயிரம் கண்கள்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஒரு பிரச்சனையில் இருந்து ஒரு சராசரி மனிதன் எப்படி வெளியே வருகிறான் என்பது தான் இந்த படத்தின் ஒரு வரி கதை. ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களை மையமாக கொண்டு ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படம் எடுக்கப்பட்டு வருகிறது.

சமிபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேர்ப்பை பெற்றுள்ளது.

Leave a Response