‘கும்கி 2’ மூலம் சினிமாவில் அறிமுகமாகும் ராஜசேகர் – ஜீவிதா மகள்…

shivaani2
ராஜசேகரும், ஜீவிதாவும் தமிழ் மற்றும் தெலுங்கில் திரையுலகை ஒரு கலக்கு கலக்கியவர்கள். தற்போது இவரது மகள் ஷிவானி தமிழில் அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தில் நடிப்பது குறித்து ஷிவானி கூறுகையில், “அப்பாவும், அம்மாவும் நடிகர்கள் என்பதால் சினிமா பற்றியும், நடிப்பு பற்றியும் சிறுவயதிலிருந்தே அறிமுகம் உள்ளது. சிறுவயதிலிருந்தே பரதநாட்டியம், குச்சுப்புடி போன்ற நடன பயிற்சிகளை பயின்றுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

“கும்கி 2” படக்குழுவினர் ஷிவானியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். அவருக்கான லுக் டெஸ்ட் எல்லாம் முடிந்துவிட்டது. விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்று படக்குழுவினர் சார்பில் தெரிவித்தார்கள். 2012-ம் ஆண்டு வெளியான ‘கும்கி’ படத்தைத் தொடர்ந்து, அதன் 2-ம் பாகத்தையும் இயக்கவுள்ளார் பிரபுசாலமன். முதல் பாகத்தில் நடித்த விக்ரம் பிரபு, இதிலும் நாயகனாக நடிப்பாரா என்பது விரைவில் தெரியவரும். ஜூலையில் படப்பிடிப்பை தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது. படப்பிடிப்பு தமிழ்நாடு மற்றும் கேரளா காட்டுப்பகுதிகளில் நடத்தப்படவுள்ளது.

Leave a Response