அதர்வாவின் “இமைக்கா நொடிகள்” ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது…

atharva
அதர்வா வளர்ந்துவரும் கதாநாயகர்களில் ஒருவரா திகழ்கிறார். இவர் இறுதியாக நடித்த கணிதன் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்பொழுது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் இமைக்கா நொடிகள். பாலிவுட் பிரபலம் அனுராக் காஷ்யாப் வில்லனாக நடிக்கிறார். கேமியோ பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். ‘ஹிப் ஹாப் தமிழா’ இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கை நாளை மாலை 7 மணிக்கும், டீசரை நாளை மறுநாள் 7 மணிக்கும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அடுத்தடுத்த 24 மணி நேரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர்

Leave a Response