இந்திய சினிமா பிரபலங்கள் வெளியிடும் “தர்பார் “

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் “தர்பார்” மோஷன் போஸ்டரை வெளியிடும் இந்திய சினிமாவின் உட்ச நட்சத்திரங்கள்!

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் “தர்பார்”.

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் நாளை மாலை 5.30 மணிக்கு வெளியாக இருக்கிறது . தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் அந்தந்த மொழி பட பிரபலங்கள் வெளியிட இருக்கின்றனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி மோஷன் போஸ்டரை உலகநாயகன் கமல்ஹாசன், மலையாளத்தில் மோகன்லால், ஹிந்தி மொழியில் சல்மான் கான் ஆகியோர் வெளியிடுகின்றனர்!

“தர்பார்” வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது.


Leave a Response