பல ஆண்டுகளாக தரப்படாமல் உள்ள, ஓய்வூதிய பலன்கள் உட்பட, தங்களுக்கு சேர வேண்டிய, 7,000 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை கேட்டு, நேற்று முதல் போராட்டம் நடத்தப் போவதாக, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.
ஆனால், நேற்று முன்தினம் மதியமே, வேலை நிறுத்தத்தை துவக்கி விட்டன. இன்று மூன்றாம் நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இன்று தமிழகத்தில் குறைந்த அளவிலான பஸ்களே இயங்குகின்றன.
கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் கர்நாடக மாநில பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. திருவாரூர் மாவட்டத்தில் மினி பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. 95 சதவீத அரசு பஸ்கள் ஓடவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் 80 சதவீத அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை.