சென்னை தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் விஷால் உடன் பெப்சி நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். 4 மணி நேரம் பேச்சுவாத்தை நடந்தது.
பின்னர் பேசிய தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் புதிய டெக்னிசியன்களுக்கான அரிய வாய்ப்பு என்ற விளம்பரத்தை திரும்ப பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு அறிவிப்பதாக தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட விஷாலின் புதிய அறிவிப்பால் வெள்ளிகிழமை முதல் பெப்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ரஜினி, விஜய் உள்ளிட்டோரின் 20 படப்பிடிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்களிடம் பேசிய பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி:-
பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், இரண்டு நாட்களுக்குள் தங்களது தொடர் வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும் என தெரிவித்தார்.
வள்ளுவர்கோட்டத்தில் இன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்வதாகவும் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.