அரசு ஊழியர்கள் மட்டுமின்றி வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்தம்!

strike

அனைத்து வங்கிகளையும் ஒருங்கிணைக்கும் அரசின் முடிவை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஒருநாள் வேலை நிறுத்தம் நடக்கிறது. இந்த வேலை நிறுத்தத்துக்கு 9 சங்கங்கள் ஒன்றாக இணைந்து ஆதரவு தெரிவித்தன.

இதையடுத்து நாடு முழுவதும் 1 லட்சத்து 32 ஆயிரம் வங்கிகளில் பணியாற்றும் 10 லட்சம் ஊழியர்களும், அதிகாரிகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுத் துறையைச் சேர்ந்த 21 வங்கிகளில் இன்று வேலை நிறுத்தம் நடந்தது. இதனால் பணி பரிவர்த்தனைகளும், இதர வங்கி பணிகளும் பாதிக்கப்பட்டன. அதே சமயம் ஆன்லைன் மூலம் நடைபெறும் பண பரிவர்த்தனைகளில் எந்த பாதிப்பும் இல்லை.

காசோலை பண பரிமாற்றங்கள் உள்பட வங்கிகள் மூலம் நடைபெறும் நேரடி பண பரிமாற்றங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வணிகர்கள் மற்றும் இதர வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எப்.சி. , ஆக்ஸிஸ், கோடக், மகேந்திரா ஆகிய தனியார் வங்கிகள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. இதனால் இந்த வங்கிகளில் காசோலை பரிமாற்றம் தவிர பணபரிவர்த்தனைகளில் எந்த பாதிப்பும் இல்லாமல் வழக்கம்போல் பணிகள் நடைபெற்றன.

Leave a Response