எடப்பாடி அரசு ஊழலை ஊக்குவிப்பதால்தான் ஆதரவு வாபஸ்! -சொல்கிறார்கள் டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்

aathrvi

ஆளுநர் மாளிகைக்கு வந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், ஆளுநரிடம் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர். அந்தக் கடிதத்தில், ”ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க-வின் சட்டமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். கடந்த பிப்ரவரி மாதத்தில் நானும், 121 எம்.எல்.ஏ-க்களும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவளித்து கடிதம் கொடுத்திருந்தோம். அதேபோல, சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு ஆதரவாக நான் வாக்களித்தேன்.

ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுமீது கொஞ்சம் கொஞ்சமாக நான் நம்பிக்கை இழந்துவிட்டேன். அதிகார துஷ்பிரயோகம், அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், ஊழல் உள்ளிட்டவையால் நம்பிக்கை இழந்துவிட்டேன். கடந்த நான்கு மாதங்களாக எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு தரப்பினரும் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கிவருகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊழலை ஊக்குவிக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டுவருவதால், அது எங்கள் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இருக்கிறது.

Leave a Response