உதகை-மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை 8 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடக்கம்…

ooty
உதகையில் பெய்த கனமழை காரணமாக ரயில் பாதையில் மரங்கள் முறிந்து விழுந்தன. கல்லாறு முதல் அடர்லி பகுதி வரை சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் விழுந்து அகற்றும் பணிக்காக மலை ரயில் சேவை கடந்த மே 7ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது.

மலை ரயில் பாதையில் கிடந்த பெரும்பாலான மரங்கள் அகற்றப்பட்ட நிலையில், ஹில்குரோவ் பகுதியில் விழுந்து கிடந்த மரங்களை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில், இயந்திரங்களின் உதவியுடன் ரயில்வே ஊழியர்கள் ராட்சத மரங்களை அகற்றினர்.

பின்னர் உதகை-மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயில் சேவை 8 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Leave a Response