சந்தானம் எப்பொழுது நடிகர் ஆனாரோ அப்பொழுது இருந்து அவரை அவ்வளவாக திரையில் பார்ப்பது இல்லை. இப்போ என்னடா சொல்ல வரன்னு கேக்குறிங்களா.
அதாவது இந்நிலையில் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் ஓடி ஓடி உழைக்கனும் படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. வாசன் விஷூவல் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தயாரிக்கும் இந்தப் படத்தில் சந்தானத்துடன் அமைரா தஸ்தூர், ரேணுகா, மன்சூரலிகான், நான் கடவுள் ராஜேந்திரன், யோகி பாபு, மயில்சாமி உள்பட பலர் நடிக்கிறார்கள். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார், ஜிப்ரான் இசை அமைக்கிறார்.
இதன் படப்பிடிப்புகள் இரண்டு கட்டமாக நடந்து முடிந்துள்ளது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. கடைசியாக சென்னை செம்மொழி பூங்காவில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை இயக்கிய கே.எஸ்.மணிகண்டன் இயக்குகிறார். இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் ஒரு பக்க கதை, பிரபுதேவா நடிக்கும் யங் மங் சங் படத்தையும் தயாரிக்கிறது.
ஒரே நேரத்தில் 3 படங்களை தயாரிப்பதால் நதி நெருக்கடி ஏற்பட்டு ஓடி ஓடி உழைக்கணும் படம் தாமதாமாக கூறப்படுகிறது. ஆனால் இதனை தயாரிப்பு தரப்பில் மறுக்கிறார்கள். “படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருக்கிறது.
பின்னணி இசை கோர்ப்பு, டப்பிங் பணிகள் ஒருபுறம் மும்முரமாக நடந்து வருகிறது. அடுத்த மாதம் படம் வெளிவரும்” என்கிறார்கள்.