காமெடியில் மீண்டும் கலகலக்க வைக்கும் சந்தானம்! பிஸ்கோத் திரை விமர்சனம்!!

சந்தானம் நடிப்பில் ஆர் கண்ணன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் ‘பிஸ்கோத்’.

விமர்சனத்தை பார்த்துவிடலாம்…

ஆடுகளம் நரேன் மற்றும் ஆனந்தராஜ் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் இணைந்து பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம் நடற்றி வருகின்றனர்.

ஆடுகளம் நரேனின் மகன் சந்தானம். சந்தானம் சிறுவயதில் இருக்கும் போது ஆடுகளம் நரேன் இறந்து விடுகிறார். அதன் பிறகு, அந்த பிஸ்கட் தயாரிப்பு நிறுவனத்தை ஆனந்தராஜ் நடத்தி வருகிறார்.

தன் தந்தையின் ஆசைப்படி, அந்த நிறுவனத்திற்கு முதலாளியாக வேண்டும் என்று, நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிகிறார் சந்தானம்.

இந்நேரத்தில், சவுகார் ஜானகியின் அறிமுகம் சந்தானத்திற்கு கிடைக்க அவர் கூறும் மன்னர் கால கதைகள் அனைத்தும் சந்தானத்தின் நிகழ்காலத்தில் நடக்கிறது.

அதன் பிறகு சந்தானத்தின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்களே படத்தின் மீதிக் கதை.

காமெடி, ஆக்‌ஷன், காதல் என அனைத்திலும் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்திருக்கிறார் சந்தானம். இதற்கு முன் ஹிட் அடித்த படங்களின் வெற்றி சூட்சமத்தை இப்படத்திற்கும் பயன்படுத்திருக்கிறார் சந்தானம்.

நாயகிகளாக தாரா அலிஷா பெர்ரி மற்றும் ஸ்வாதி முப்பலா இருவரும் அழகிலும் நடிப்பிலும் சூப்பர்.

மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், சவுகார் ஜானகி மற்றும் ஆனந்தராஜ் அனைவரும் கதைக்கேற்ற கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து முடித்திருக்கின்றனர்.

பரதனின் பின்னனி இசை படத்திற்கு பலம். சண்முக சுந்தரம் அவர்களின் ஒளிப்பதிவு கலர் ஃபுல்.

ஆர் கண்ணனின் இயக்கம் கதையை நேர்த்தியாக கொண்டு செல்கிறது. சிறிய கதை தான் என்றாலும், அதை காமெடி கலாட்டா விருந்தாக படைத்திருக்கிறார் இயக்குனர்.

காமெடியில் மீண்டும் கலகலக்க வைக்கும் சந்தானம்! பிஸ்கோத் ஒரு காமெடி தர்பார்!!

Leave a Response