ரஜினி போன்ற மூத்த நடிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆர்கியூ செய்ய மாட்டார்கள் ! – இயக்குநர் முருகதாஸ்…

ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கும் திரைப்படம் ‘தர்பார்’. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக ஒரு மாதத்திற்கு முன்பு முடிவுற்று, தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பனி நடைபெற்று வருகிறது. இப்படத்தை பற்றி இயக்குநரிடம் நம் இணையதளத்தின் சார்பாக சில கேள்விகள் வைக்கப்பட்டன.

தர்பாருக்கு முன்பு, அஜித், விஜய், மகேஷ் பாபு போன்ற இளைஞர்களுடன் இயக்குநராக பணியாற்றியுள்ளார், அதே போல் மூத்த நடிகர்களான விஜயகாந்த், சிரஞ்சீவி தற்போது ரஜினிகாந்த் ஆகியோர்களுடனும் இயக்குநராக பணியாற்றிய போது, இளைஞர்களை இயக்குவதிலும், மூத்த நடிகர்களை இயக்குவத்திலும் என்ன வித்யாசம் அல்லது என்ன அனுபவம் கிடைத்ததது என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு முருகதாஸ் பதிலளித்ததாவது, “பெரிய நடிகர்களுடன் பணியாற்றும் போது ரொம்ப கம்பர்ட்டாக இருக்கும், என்ன கம்பர்ட் என்றால், அவர்கள் வர்கிங் முறை சற்று வேறுபட்டு இருக்கும். அதாவது படப்பிடிப்புக்கு முன்பே அவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களை கேட்டு ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அந்த மூத்த நடிகர்கள் வந்துவிட்டால், சின்ன இயக்குநர், பெரிய இயக்குநர் என்ற பாகுபாடு பார்க்காமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு இயக்குநர் சொல்வதை கேட்டு நடிப்பார்கள், டைரக்டர் தான் இங்கு மாஸ்டர், அவர் சொல்வதை கேட்டு நாம் நடிக்க வேண்டும் என்பது இந்த மூத்த நடிகர்கள் அனைவருக்கும் இருக்கிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் எந்த விதமான ஆர்கியூவும்(வாதிடு) அந்த மூத்த கலைஞர்களிடம் இருக்காது. அப்படியே அவர்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால், ஒரு காட்சி முடிந்த பிறகு டபுள் பாசிட்டிவ் பார்க்கும் போது, இதை இப்படி செய்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நம்மிடம் ஒரு ஆலோசனையாக தான் சொல்வார்கள் இந்த மூத்த நடிகர்கள் என்றார்.

அதே யங் ஆர்ட்டிஸ்டுகள், தாங்கள் கஷ்டப்பட்டு வந்த பாதை, தான் இருக்கும் இடத்தை விட்டுவிட கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். எனவே ஷூட்டிங் போதே அவர்கள் அவர்களுடைய சந்தேகங்களை கேட்பார்கள். காரணம் அவர்களுக்கு காட்சி எப்படி வருமோ என்ற ஒரு ஐயம் இருக்கும். அவர்கள் அப்படி கேட்கும் போது, நமக்கே ஒரு டவுட் வந்து விடும். சினிமா என்பது ஒரு மெட்டிரியல் கிடையாது, அது ஒரு மேஜிக் தானே. எனவே இளம் நடிகர்களுக்கு அந்த சந்தேகம் வரும், அது தவறு கிடையாது. இது தான் மூத்த நடிகர்களுக்கும் யங் நடிகர்களுக்கும் உள்ள வித்யாசம்.” என நம்முடைய கேள்விக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பதிலளித்தார்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனை இப்படத்தில் பாட வைக்க யார் பரிந்துரை செய்தது என்ற கேள்வியை நம்முடையாய் நிருபர் எழுப்பினார். அதற்க்கு முருகதாஸ் சொன்னதாவது, “ரஜினி சாருக்கு எஸ்.பி.பி என்பது சென்டிமெண்டாகவே நல்ல இருக்கும். அவர் முழு பாடலாக பாடி ரொம்ப நாளாச்சு, “பேட்டை” படத்தில் ஒரு போர்ஷன் பாடியிருந்தார் முழுசாக பாடவில்லை. சோ இந்த படத்தில் முழு பாடலை எஸ்.பி.பி சார் பாடினால் நன்றாக இருக்கும் என்று எனக்கும் இசையமைப்பாளர் அனிருத்தும் தோணுச்சு, அதையே முடிவு செய்தொம்! அப்படியே அவரை இந்த படத்தில் முழு பாடலை பாட வைத்தோம்.” என்றார் முருகதாஸ்.

இன்னும் பல சுவாரசியமான கேள்விகளும், இயக்குநர் முருகதாஸின் பதில்களும் அடுத்த சில தினங்களில் காணலாம்.

Leave a Response