விஜய்யால் அரசியலில் ஜெயிக்க முடியாது : ரஜினியின் அண்ணன் சத்திய நாராயணா!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் மட்டும் 8 லட்சம் பேர் கலந்துகொண்டதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகையைப் பலரும் ஆதரித்தும் விமர்சித்தும் வருகின்றனர்.

அந்த வகையில், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்ய வந்திருந்த நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயண ராவ் கெய்க்வாட், தரிசனத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் விஜய்யால் அரசியல் கட்சி ஆரம்பித்து தமிழ்நாட்டில் ஜெயிக்கமுடியாது என்றார்.

மதுரையில் இதுதொடர்பாக நடிகர் ரஜினியின் அண்ணன் சத்திய நாராயண ராவ் கெய்க்வாட் அளித்த பேட்டியில், ” வரட்டும். வரட்டும். கமல்ஹாசன் மாதிரி அவங்களும் முயற்சி பண்ணட்டுமே. அவங்களுக்கு அந்த உரிமை இருக்கு. அதனால் அவங்க பண்ணட்டும். மக்களுக்குப் பண்ணனும்னு ஆசைப்பட்டுருக்கார் விஜய் அவ்வளவு தான். அவர் கட்சி ஆரம்பிச்சு பிரயோஜனம் இல்லை. அதனால் ஒன்னும் சாதிக்கமுடியாது. அரசியலுக்கு வந்திருக்கார். சரி முயற்சி பண்ணட்டும். மனசில் என்ன நினைச்சு அரசியலுக்கு விஜய் வந்திருக்கார்ன்னு தெரியாது.

நானும் அரசியலுக்கு வந்து பண்ணனும்னு நினைக்கிறார். வந்தபின் என்னப் பண்றார்னு தெரியல. முடியாது. தமிழ்நாட்டில் முடியாது. விஜய்னால முடியாதுங்க. இப்போ, அவர் ஆசைப்பட்டிருக்கார் அவ்வளவு தான். இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும். என்னப் பண்றார்னு பார்க்கலாம். முயற்சி பண்ணட்டும்ங்க. ஆனால், ஜெயிக்கமுடியாது. கஷ்டம்” என பேசி முடித்தார். நடிகர் ரஜினியின் அண்ணனின் இந்தப் பேச்சால், நடிகர் விஜய் ரசிகர்கள் மற்றும் அவரது கட்சியினர் கொதிப்படைந்துள்ளனர்

Leave a Response