நடிகர் விஜய் ஹாலிவுட் படம் நடிகிறார!..

vijay-1
பி.வாசு இயக்கத்தில் விஜய் நடிப்பதாக இருந்த ஹாலிவுட் படம் குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கடந்த 2013-ஆம் ஆண்டு பி.வாசு இயக்கும் ஹாலிவுட் படம் ஒன்றில் இளைய தளபதி விஜய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்தில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான அனில் கபூர் மற்றும் சோனம் கபூர் ஆகியோர் நடிப்பார்கள் எனவும் கூறப்பட்டது. ஆனால் 4 ஆண்டுகள் கடந்தும் அந்த படம் குறித்த அடுத்தக்கட்ட தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இந்நிலையில் அந்த ஹாலிவுட் படத்தை இயக்குவதாக இருந்த பி.வாசு, இது குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

”நாங்கள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கும் சென்று, அங்கு 15 நாட்கள் தங்கியிருந்தோம். ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட்டின் பிரபல நடிகரான நிக்கி நோல்டேவிடம், படத்தின் கதையை நான் விவரித்தேன். என்னுடைய படத்தில் 70 வயது மதிக்கத்தக்க கதாபாத்திரம் ஒன்று உள்ளது. அதில் நிக்கி நோல்டேவை நடிக்க வைக்க எண்ணினேன். படத்தின் கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.

அவர் ஹாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர். அவருடன் இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் மற்றும் சோனம் கபூர் ஆகியோர் நடிக்கும் போது படத்தின் பட்ஜெட் எகிறும் என்பது புரிந்தது. அதுமட்டுமல்லாமல் அந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சி, பெரும் பொருட்செலவில் எடுக்க வேண்டி இருந்தது. எனவே பட்ஜெட் பிரச்சனையால் தான் அந்தப் படம் நிறுத்தப்பட்டது. எதிர்காலத்தில் எனக்கு தேவையான பட்ஜெட் கிடைத்தால், கண்டிப்பாக ஹாலிவுட் படத்தை இயக்குவேன்.” என பி.வாசு தெரிவித்துள்ளார்.

Leave a Response