ஏப்ரல் 14 ல் வெளியாகும்-ப.பாண்டி

paajkiran
படம்- பா.பாண்டி

இயக்கம்- தனுஷ், இசை- ஷேன் ரோல்டன், தயாரிப்பு : வுண்டர்பார் ஃபிலிம்ஸ்,

நடிகர்கள்- ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயா சிங், மடோனா செபஸ்டியன், தனுஷ், ரின்சன், டிடி, ரோபோ ஷங்கர், டெல்லி கணேஷ், வித்யுலேகா ராமன், பாலாஜி மோகன்,

நாம் வாழும் இந்த உலகத்தில் நல்லதும், கெட்டதும் இருக்கிறது. அன்பு, நிம்மதி, பாசம், கோபம் போன்ற பல விஷயங்கள் நம்மை சுற்றி இருக்கிறது. நல்லதை மட்டும் அதில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே பவர் பாண்டி படத்தின் கதையாகும்.

இந்த பவர் பாண்டி படம் முதியவர்களைப் பற்றி பேசுகிற படம். நம் சமூகத்தில் ஒருவருக்கு 60 வயதுக்கு மேல் ஆகிவிட்டால், அவரை ஒரு உதவாத பொருளாகத்தான் பார்க்கின்றனர். அதைப் பற்றி பேசும் படம் என பவர் பாண்டியாக நடித்துள்ள ராஜ்கிரண் கூறியுள்ளார்.

தணிக்கையில் இப்படம் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது. வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. தனுஷ் இயக்கும்முதல் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பவர் பாண்டி மீது அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது.

Leave a Response