“பிருந்தாவனம்” திரைப்படத்தின் டீசர் வெளியீடு!..

brindhavanam_3152857f
‘மொழி’ திரைப்பட புகழ் இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘பிருந்தாவனம்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

‘வான்சன் மூவீஸ்’ தயாரிப்பில் உருவாகி வரும் ‘பிருந்தாவனம்’ திரைப்படத்தில் அருள்நிதி, விவேக், தான்யா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டீசரை பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். ‘பிருந்தாவனம்’ டீசரை பார்த்த பிரபலங்கள் படக்குளுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அருள்நிதி காது கேளாதவராக நடிக்கும் ‘பிருந்தாவனம்’ படத்தில் விவேக் ஒரு நடிகராகவே நடித்துள்ளார். விவேக்கிற்கும் அவரது மிகப் பெரிய ரசிகரான அருள்நிதிக்கும் இடையே நடக்கும் சம்பவங்களை வைத்து ஷாருக்கானின் ‘ஃபேன்’ பட ஸ்டைலில் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Response