படப்பிடிப்பு முடிந்த ராதா மோகன் – எஸ்.ஜே. சூர்யா படம்…

ராதா மோகன் இயக்கத்தில் S.J.சூர்யா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “பொம்மை”. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவுபெற்றுள்ளது.

படப்பிடிப்பு முடிவுற்ற “பொம்மை” படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது துவங்கியுள்ளது.

ஏஞ்சல் ஸ்டுடியோஸ் MH LLP வழங்கும் இப்படத்தை V.மருது பாண்டியன், Dr.ஜாஸ்மின் சந்தோஷ், Dr.தீபா, T.துரை ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

பாடல்களை கார்க்கி எழுத, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ராஜு சுந்தரம் மற்றும் பிரிந்தா நடன காட்சிகளை இயக்கியுள்ளார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவை மேற்கொள்ள, ஆண்டனி படத்தொகுப்பினை செய்துள்ளார்.

M.R.பொன் பார்த்திபன் வசனம் எழுதி, ராதா மோகன் இயக்கும் இப்படத்தின் இசை வெளியீடு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு கூறியுள்ளது.

Leave a Response