குமரி மாவட்டத்தில் மழை மகிழ்ச்சியில் மக்கள்!..

kumari
தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், கன்னியா குமரி மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இன்று மழை பெய்து வருகிறது.

தமிழகம் முழுவதும் கடந்தாண்டு மற்றும் நடப்பாண்டில் மழை இல்லாமல், வெளியிலும் வாட்டி வதைத்து வருகிறது. முக்கியமாக சென்னை, வேலூர், கோவை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் வெயில் அதிகரித்து காணப்படுகிறது. இத்துடன் தண்ணீர் பஞ்சமும் சேர்ந்து கொண்டதால், மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

கடந்த 142 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகம் வறட்சியை சந்தித்து வருகிறது. நீர் நிலைகள் வறண்டு, அணைகளில் 20 சதவீத நீர் மட்டுமே இருக்கும் நிலையல், ஏரி, குளங்களும் வறண்டு காணப்படுகிறது. தமிழக அரசும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் வறட்சி மாவட்டங்களாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இதம் அளிக்கும் வகையில் கன்னியாகுமரியில் இன்று மழை பெய்தது. இதனால் அந்தப் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது.

Leave a Response