மலையாள திரையுலகில் மகேஷ் பாபு!..

spyder_3153722f
தெலுங்கு முன்னணி நடிகரான மகேஷ் பாபுக்கு ஆந்திரா, தெலங்கானா,தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளாவிலும் கணிசமான ரசிகர் கூட்டம் இருக்கிறது. எனவே மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகும் படங்கள், டப் செய்யப்பட்டு கேரளாவில் வெளியிடப்படுகின்றன. இந்நிலையில் தென்னிந்திய திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மகேஷ் பாபுவின் “ஸ்பைடர்” திரைப்படம் மலையாளத்தில் டப் செய்து வெளியிடப்பட உள்ளது.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ‘ஸ்பைடர்’ வெளியாகும் நாள் அன்றே, மலையாளத்திலும் அந்த படம் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இந்த படம் மகேஷ் பாபு நடிக்கும் முதல் நேரடி தமிழ் படமாகும். இந்த படத்தில் புலனாய்வுத்துறை அதிகாரியாக மகேஷ் பாபு நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.

Leave a Response