சேது படத்தில் ஒன்றாக நடித்த விக்ரம் மற்றும் ஸ்ரீமன் 18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்த சேது திரைப்படம் 1999ஆம் ஆண்டு வெளியானது. இதில் விக்ரம் உடன் ஸ்ரீமன் நடித்திருந்தார். இவர்கள் இணை பெரும் வெற்றியை பெற்றது. தற்போது விஜய் சந்தர் இயக்கிவரும் ஸ்கெட்ச் எனும் படத்தில் 18 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைகின்றனர்.
ஸ்கெட்ச் படத்தில் ஸ்ரீமனுக்கு முக்கிய கதாப்பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் விக்ரம் உடன் இருப்பது போல் கதைக்களம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 18 வருடங்களுக்கு முன்னர் சேது படமாக்கப்பட்ட, எழும்பூர் பகுதியில் உள்ள ஸ்டோர் ஹவுசில் தற்போது ஸ்கெட்ச் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுவருகிறது. சேதுவிற்கு பிறது ஸ்ரீமனும், விக்ரமும் ஒரு நடனப்பள்ளியில் நடனம் பயின்றுள்ளனர். தற்போது சென்னையில் படக்குழுவினர் படத்திற்கான சண்டைக்காட்சிகளை படமாக்கிவருகின்றனர்.