திருப்பூரில் பெண் தாக்குதல், A D S P பாண்டியராஜன் சஸ்பெண்டு, ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!..

javaharulla
மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவா ஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம், காரணம்பேட்டையில் இருந்து கருமத்தம்பட்டி செல்கின்ற மாநில நெடுஞ்சாலையில் சாமளாபுரத்தில் மதுக்கடையைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள் உட்பட அனைத்து மக்களும் ஜனநாயக முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறை கூடுதல் டி.எஸ்.பி. பாண்டியராஜன், பெண்கள் என்றும் பாராமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கண் மூடித்தனமாகத் தாக்கியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

காவல்துறையில் இது போன்ற காட்டு மிராண்டிதனமான் ஆட்கள் இருப்பது வருத்த மளிக்கிறது. தமிழக அரசு கூடுதல் டி.எஸ்.பி. பாண்டியராஜன் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும்,இந்த விசாரணைகள் முடியும்வரை அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Response