பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ரயிலில் சிக்கி உயிரிழந்த மருத்துவர்…

rajiv
பிறந்தநாள் கொண்டாடும் சமயத்தில், மருத்துவர் ஒருவர் ரயிலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் கல்வாவில் உள்ள சத்ரபதி சிவாஜி மஹாராஜ் மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர் மருத்துவர் மனோஜ் குல்கர்னி. அவர் ராஜிவ் காந்தி மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார். நாள்தோறும் புனேவில் இருந்து தானேவிற்கு புறநகர் ரயிலில் பயணம் செய்வது வழக்கம். இரவு காலதாமதம் ஏற்பட்டால், விரைவு ரயிலில் தானேவிற்கு சென்று வந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, காலை 9.30 மணியளவில் நந்தேத்-பன்வெல் விரைவு ரயிலில் மருத்துவமனைக்கு செல்வதற்காக புறப்பட்டுள்ளார்.

ரயிலில் மிகுந்த கூட்ட நெரிசலாக இருந்த காரணத்தால், அவசர அவசரமாக தனது ஸ்டேஷனில் இறங்கியுள்ளார். அப்போது நிலை தடுமாறி, ரயில் நிற்கும் இடைவெளியில் நின்றுள்ளார். அப்போது ரயில் வேகமாக நகர்ந்தது. அதனால் ரயில் சக்கரத்தில் மாட்டி, உடல் நசுங்கி உயிரிழந்தார். இன்று அவருடைய 50வது பிறந்தநாள் கொண்டாட நண்பர்கள் சிறப்பான ஏற்பாடு செய்திருந்த நிலையில், அவரது மரணம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response