மும்பை சிக்னலில் காரிலிருந்து 5 லட்சம் கொள்ளை !

மும்பையைச் சேர்ந்த மக்வானா என்பவர் தனது காரில் ஆர்.எம்.பட் சாலையில் உள்ள  சிக்னலில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது காரின் அருகே வந்த நபர், கார் கண்ணாடியை தட்டியுள்ளார். மக்வானா கார் கண்ணாடியை திறந்த போது, காரின் மறு பக்கத்தில் வந்த வேறு ஒரு நபர், மக்வானாவிடம் பேச்சு கொடுத்துள்ளான்.

அந்த சமயத்தில், காரின் வெளியே இருந்த இன்னொரு நபர், மக்வானாவின் 5 லட்ச ரூபாயை காரில் இருந்து திருடினான். இதனையடுத்து அந்த இரு திருடர்களும் ஒரு ஆட்டோவில் ஏறி அங்கிருந்து தப்பியோடினர். இதனையடுத்து மக்வானாவும் திருடர்களை பின் தொடர்ந்தபடி வேறு ஆட்டோவில் சென்றார். இதனைக்கண்ட பொதுமக்கள் ரோந்துப்பணியில் இருந்த போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

போலீஸாரும் திருடர்களை பின்தொடர்ந்தனர். சிறிது நேரத்தில் மக்வானா திருடர்களை மடக்கிச் சென்று பிடித்தார். போலீஸார் திருடனிடம் இருந்த பையை வாங்கி மக்வானாவிடம் ஒப்படைந்தனர். போலீஸார் திருடர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

Leave a Response