கூட்டு பலாத்காரம்: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி..

mantally
மேகலயாவின் கிழக்கு ஜெயிண்டியா ஹில் மாவட்டத்தில் கடந்த 2ஆம் தேதி 16 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி, 5 சிறுவர்கள் உட்பட 7 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்துள்ள போலீசார், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

அம்மாநிலத்தில் சிறுவர்கள் ஈடுபட்ட பாலியல் குற்றத்தில் இது இரண்டாவது சம்பவமாகும். மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவர்கள் 12 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதில் தொடர்புடைய 2 இளைஞர்கள், தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது பாக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் கூட்டு பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற 7 சிறுவர்களும் சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Response