உலகளாவிய காவல் துறை தடகள போட்டியில் தங்க பதக்கங்களை வென்ற சென்னை காவலர் பிரமிளா!

நெதர்லேண்ட்ஸ் நாட்டிலுள்ள ரோட்டர்டேம் என்னும் ஊரில் தற்போது ‘உலக காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விளையாட்டு 2022’ போட்டி நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெறவிருக்கும் தடகள, க்ராஸ்பிட், வாட்டர் போலோ போன்ற 63 வகையான விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள உலகிலுள்ள 70 நாடுகளில் இருந்து சுமார் 10,000 விளையாட்டு வீரர்க்க்ள் காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையிலிருந்து கலந்து கொண்டுள்ளனர்.

சென்னை அண்ணா நகர் K4 காவல் நிலையத்திலுள்ள போக்குவரத்து பிரிவில், ஆர்.பிரமிளா என்பவர் காவலராக பணியாற்றுகிறார். இவர் ஒரு தடகள வீரராவர். இந்த தடகள போட்டியில் கலந்துகொள்ள, பிரமிளா நெதர்லேண்ட்ஸ் நாட்டிலுள்ள ரோட்டர்டேம் சென்றுள்ளார். தடகள போட்டியில் கலந்துகொண்ட பிரமிளா மூன்று தங்க பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளி பதகத்தையும் பெற்றுள்ளார்.

பதகங்களின் விவரங்கள் கீழ் வருமாறு:
1. 100 மீட்டர் ஓட்ட பந்தயம் – தங்கம்
2. 400 மீட்டர் ஓட்ட பந்தயம் – தங்கம்
3. நீளம் தாண்டுதல் – தங்கம்
4. 200 மீட்டர் ஓட்ட பந்தயம் – வெள்ளி.


இதே பிரமிளா, இதற்கு முன்பு சீனாவில் நடைபெற்ற ‘உலக காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விளையாட்டு 2019’ போட்டியில் கலந்துகொண்டு ஒரு தங்க பதக்கம் மற்றும் மூன்று வெள்ளி பதக்கங்கள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தடகள விளையாட்டில் பிரமிளாவின் தொடர் பயிற்சி, அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் இம்முறை மூன்று தங்க பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்துள்ளது.


பிரமிளா அவர்களின் உலகளாவிய வெற்றி தமிழக காவல் துறைக்கு மற்றும் சென்னை காவல் துறைக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

வாழ்த்துகள் பிரமிளா.

Leave a Response