தமிழகத்தில் இனி வரும் நாட்களில் சுட்டெரிக்க போகும் வெயில்.!

too hot

வெப்பச்சலனம் மற்றும் கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் ஆகியவற்றின் காரணமாக உள்தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தலைநகர் சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 32 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் வரும் கோடைகாலம் குறித்து குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள ஆய்வி மையம் தமிழகத்தில் இன்று முதல் பனிப்பொழிவு குறைந்து, வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கும் என கூறியுள்ளது. குறிப்பாக வரும் 2 நாட்களில் நெல்லை உள்ளிட்ட பல நகரங்களில் கடுமையான வெயிலின் தாக்கம் இருக்கும் என கூறியுள்ளது.

வரும் நாட்களில் பல மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை தொடும், சில இடங்களில் 102 டிகிரி வெப்பம் வரை பதிவாகும் என கூறியுள்ளது. வெயிலின் தாக்கம் வரும் ஜூன் 2-ம் வாரம் வரை நீடிக்கும் என கூறியுள்ள ஆய்வு மையம் சில இடங்களில் கோடை மழையும் பெய்யும் என குறிப்பிட்டுள்ளது.

Leave a Response