வெளி நாட்டில் உள்ள பிரபல யூனிவர்சிட்டியில் சேர்வதற்கு NEW EDGE கொடுக்கும் பயிற்சி

மயிலை தி. மு. க. எம். எல். ஏ T. வேலு, பெப்சி தலைவர் R. K. செல்வமணி தொடங்கிய தலைமை செயல் தலைவர் ரமேஷ் பட்டின் சென்னை “NEW EDGE”, புதிய அலுவலகம் அடையாறில் துவங்கப்பட்டது.

உயர்கல்வி பயிலுவதற்கு சென்னையில் ஓர் பயிற்சி நிறுவனம் இருக்கிறது. அதன் பெயர் “New Edge” என்பதாகும். 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்ஷேர்ப்பில் அனுபவம் வாய்ந்த தரமான நிறுவனமாகும்.

வெளி நாட்டில் உள்ள பிரபல யூனிவர்சிட்டியில் சுலபமாக சேர்வதற்கு, ” NEW EDGE ” கொடுக்கிற கல்வி பயிற்சி மிகவும் உதவியாக இருக்கிறது. ஹைதரபாத், விசாகபட்டினம், விஜயவாடா போன்ற இடங்களில் “NEW EDGE” அலுவலகம் பிரபலமாக உள்ளது. தற்போது சென்னை அடையாறில் தங்களது புதிய கிளையை துவங்கியுள்ளது.

வெளிநாட்டில் உயர்படிப்பை மேற்கொள்ள விரும்பும் இந்திய மாணவர்களுக்கு சிறந்த சேவைகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது. IELTS/ TOEFL/ PTE / GRE/ GMAT/ SAT போன்ற தகுதி தேர்வுகளுக்கும் சிறந்த பயிற்சி அளிக்கிறது. அதாவது பயிற்சி சுயவிவர மதிப்பீடு, சேர்க்கை செயலாக்கம், விசா செயலாக்கம், உதவித்தொகை விவரங்கள் என பல்வேறு சேவைகளை அளித்து வருகிறது.

தலைசிறந்த கல்வி ஆலோசனை நிறுவனமாக தர மதிப்பீடு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கல்வி, பயிற்சி மற்றும் இடம்பெயர்வு மூலம் வாழ்க்கையையும், தொழிலையும் செம்மையாக வடிவமைப்பதே அவர்களின் தலையாய நோக்கமாகும்.

Leave a Response