குரங்குடன் குடும்பம் நடத்தி வந்த சிறுமியை காப்பாற்றிய காவல்துறை

kurangu sirumi
மனிதரை போல் பேசாமல், அசாதாரண நடவடிக்கைகளை சிறுமி குரங்கு கூட்டத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். கட்டர்னியாகத் வனவிலங்கு சரணாலயம் ரோந்து ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் யாதவ் இந்த சிறுமியை கண்டுள்ளார்.

அப்போது குரங்குகளிடம் இருந்து சிறுமியை மீட்க முயன்றபோது, குரங்குகள் தன்னை நோக்கி சீரியதாகவும், அதேபோல் சிறுமியும் செய்ததாகவும் சுரேஷ் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து பெரும்பாடுபட்டு சிறுமியை மீட்ட காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பேசவும், தெரியாமல், மொழியும் புரியாமல் இருக்கும் அந்த சிறுமி மருத்துவமனையில் நடமாடும் மனிதர்களை கண்டு அஞ்சுவதாகவும், சிகிச்சை அளிக்கும்போது மிகவும் கொடூரமாக நடந்துக் கொள்வதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது சிகிச்சைக்கு பின் சிறுமி சற்று குணமடைந்து வருவதாகவும், ஆனால் சிகிச்சையின் பலன் மெதுவாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எந்த உணவையும் சிறுமி நேரடியாக வாயால் உண்பதாக அவர்கள் கூறுகின்றனர். தற்போது கால்களால் நடக்க நடை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. சிறுமி விலங்குகளை போல் இரண்டு கை மற்றும் கால்களை சேர்த்து மண்டிபோட்டு நடப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Leave a Response