தலை குனிந்த படி பார்த்துக்கொண்டிருந்தால் கழுத்துப் பிரச்னை ஏற்படும்!..

kazhuththu
நீண்ட நாட்கள் செல்போனை தலை குனிந்த படி பார்த்துக்கொண்டிருந்தால் கழுத்துப் பிரச்னை ஏற்படுவது நிச்சயம். இதனை சீனாவை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பிரச்னை மூலம் தெள்ளத்தெளிவாக தெரியவந்துள்ளது.

சீனாவின் ஹாங்காங் மாகாணம், ஷிண்டாவ் பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி, தினமும் செல்போனை தலை குனிந்த வண்ணம் பார்த்ததால் கழுத்துப்பகுதி நிரந்தரமாக சேதப்படுத்திக்கொண்டுள்ளார். அவரால் கழுத்தை நேராக நிமிர்த்த முடியாமல் போய்விட்டது. இதற்கு காரணம் கழுத்து எழும்பு குனிந்த நிலையிலேயே இறுகிப் போய்விட்டதாக, எக்ஸ்ரே பரிசோதனைக்கு பின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது தீவிர சிகிச்சைக்கு பின் அந்த சிறுமி சற்று தேரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் மீண்டும் செல்போனை பயன்படுத்தினால் நிலமை இன்னும் மோசமாகி விடும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவரது தந்தை கூறும் போது, “தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் எப்போது, செல்போனில் எதையாவது பார்ப்பதையே வேலையாக வைத்திருப்பார் என் மகள். பல முறை அவருக்கு அறிவுரை கூறியும் கேட்காமல், செல்போனை பார்ப்பதையே பழக்கமாக்கி கொண்டார். இதனால் தான் இப்படி ஒரு விபரீதம் ஏற்பட்டது.

என் மகளை பார்த்தாவது இனி யாரும் இப்படி செல்போனை அதிக நேரம் பார்க்காதீர்க்கள்.” என கதறி அழுதபடி பேசியுள்ளார்.

Leave a Response