ரேசன் கார்டில் மாற்றாங்கள் செய்ய நாளை சிறப்பு முகம்

res
ரேசன் கார்டில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்த மக்கள் குறைதீர் கூட்ட முகாம் நாளை சென்னையின் பல்வேறு இடங்களில் நடைபெற இருக்கிறது.

ரேசன் கார்டில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்ட முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் . இந்தநிலையில் சென்னையில் 17 மண்டல பகுதிகளில் மக்கள் குறைதீர் கூட்ட முக்கம் மார்ச் 11-ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த முகாமில் குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் பொது விநியோக திட்ட பொருள்கள்கிடைப்பது குறித்தும் தனியார் துறையில் சந்தையில் விற்கப்படும் பொருட்கள்அல்லது சேவைகள் வாங்கும் நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது அல்லது குறைகள்இருப்பது குறித்தும் தங்களுக்கு குறைகளை தெரிவிக்கலாம்.
சென்னையில் உள்ள 17 மண்டல பகுதியில் கூட்டம் நடைபெறும் இடங்கள்:

1 சிதம்பரனார் – சென்னை நடுநிலைப்பள்ளி, எண்.44, ராமசாமி தெரு, சென்னை – 01. (மண்ணடி)

2 இராயபுரம் – பி.ஏ.கே. பழனிசாமி ஆரம்ப பள்ளி, கிரேஸ் கார்டன் முதன்மை தெரு, இராயபுரம், சென்னை – 13. (ரேணி மருத்துவமனை பின்புறம்)

3 பெரம்பூர் – சென்னை நடுநிலைப் பள்ளி, கோகுலம், 22/26, செய்யூர் பார்த்தசாரதி தெரு, பெரம்பூர், சென்னை – 11. ( பெரம்பூர் பஸ் நிலையம் அருகில்)

4 அண்ணாநகர் – சென்னை மாநகராட்சி, 104 வது கோட்ட அலுவலகம், லெட்டாங்ஸ் ரோடு, வேப்பேரி, சென்னை – 07. (சி எஸ் ஐ ஈவார்ட்ஸ் மேனிலைப்பள்ளி அருகில்)

5 அம்பத்தூர் – அரசு உயர்நிலைப்பள்ளி, வானகரம், சென்னை – 95 (ஊராட்சிமன்ற அலுவலகம் அருகில்)

6 வில்லிவாக்கம் – அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி, பழைய திருமங்கலம்,சென்னை– 40.(செந்தில் நர்சிங்கம் அருகில் 13 வது பிரதானசாலை முடிவில்)

7 திருவொற்றியூர் – த் வி. ராமகிருஷ்ணா க்ஷமல் நிலைப்பள்ளி (தெலுங்கு பள்ளி), வடக்கு ரயில்வேஸ்டேசன் ரோடு, திருவொற்றியூர், சென்னை– 19.(திருவொற்றியூர் இரயில் நிலையம் அருகில்)

8 ஆவடி – அரசு மேல்நிலைப்பள்ளி, தண்டுரை, பட்டாபிராம், சென்னை – 72 (பட்டாபிராம் இரயில் நிலையம் அருகில் )

9 ஆர்.கே.நகர்- சென்னை துவக்கப்பள்ளி,புதுக்கடை பண்ணை, செரியன் நகர், புது வண்ணாரப்பேட்டை, சென்னை – 81. (கிராஸ் ரோடு, சக்தி மெட்டல் பின்புறம்)

10 தி.நகர்- அரசினர் மேல்நிலைப்பள்ளி, அசோக் நகர், சென்னை- 600 083 (புதூர் பள்ளி பேருந்து நிறுத்தம் அருகில்)

11 மயிலாப்பூர் – இளநிலை பொறியாளர் அலுவலகம், சாஸ்திரி நகர், 8வது குறுக்குத்தெரு, அடையார், சென்னை-600 020 (வண்ணாந்துரை பேருந்து நிறுத்தம் அருகில்)

12 பரங்கிமலை – செயின்ட் மார்க்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளி, இராதாநகர் மெயின் ரோடு, இராதா நகர்,குரோம்பேட்டை, சென்னை- 600 044. (இராதா நகர் வாட்டர் டேங்க் அருகில்)

13 தாம்பரம் – ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பொழிச்சலூர் மெயின்ரோடு, பொழிச்சலூர், சென்னை 600 074. (ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில்)

14 சைதாப்பேட்டை – சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பெருமாள் கோயில் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை – 600 033. (மேட்டுப்பாளையம் சர்ச் அருகில்)

15 ஆயிரம்விளக்கு – சென்னை மாநகராட்சி உயர் நிலைப் பள்ளி, எண் 4, ஸ்டரான்ஸ் ரோடு,
பட்டாளம், சென்னை- 600 012, (மஉறாலட்சுமி தியேட்டர் அருகில்)

16 சேப்பாக்கம் – சென்னை தொடக்கப்பள்ளி, எண்: 25, நாகப்பதெரு, புதுப்பேட்டை,
சென்னை-600 002 (புதுப்பேட்டை மார்க்கெட் அருகில்)

17 சோழங்கநல்லுhர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம். ஏழுமலை சாலை. நன்மங்கலம்,
சென்னை – 600129. (ஜெ,ஜெ, பார்க் அருகில்)

Leave a Response