ஆசிரியர் தகுதி தேர்வுக்கு ‘தாட்கோ’ அளிக்கும் இலவச பயிற்சி…

tn-tet-1
தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு வரும் ஏப்ரல் மாதம் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கு தமிழக அரசின் நிறுவனமான தாட்கோ மூலம் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சிகள் நடத்தப்பட உள்ளது.

இந்த தேர்வை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் சிறப்பான முறையில் எழுத தமிழக அரசு தாட்கோ மூலம் சிறப்பு இலவச பயிற்சியை அளிக்கிறது. இந்த இலவச பயிற்சியில் சேர ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தாங்கள் பயின்ற பாடங்களில் 60 சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். இந்த இலவச பயிற்சிக்கு http:training.tahdco.com தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ,”
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர் தகுதி தேர்விற்கான பயிற்சி தாட்கோ மூலம் இலவசமாக வழங்க உள்ளதால் 60 சதவீத கல்வி தகுதி வாய்ந்தவர்கள் http://training.tahdco.com என்ற இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இலவச பயிற்சியானது தமிழக அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கீழ் நடத்தப்படுகிறது.

Leave a Response