தமிழ் மாநில காங்கரஸ் மார்ச் 14-ல் ஆர்ப்பாட்டம்

gk.vaasan
மத்திய, மாநில அரசை கண்டித்து தமிழ் மாநில காங்கரஸ் கட்சி வருகின்ற மார்ச் 14-ம் தேதியன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும், மீனவர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணவேண்டும், நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றக் கோரியும், மத்திய, மாநில அரசுகள் மெத்தனப் போக்கை கைவிட்டு இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே வருகிற 14-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் தமாகா மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்றும் ஜிகே வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response