பணமதிப்பிழப்பை கண்டித்து இன்று மதுரையில் திமுக ஆர்ப்பாட்டம்!

madu
கடந்த வருடம் இதே நாளில் தான் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பை அறிவித்து இன்றுடன் ஓராண்டு முடிவடைவதையொட்டி நாடு முழுவதும் இன்று
எதிர்கட்சிகள் கருப்பு தினமாக அறிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து மத்திய அரசை கண்டித்து இன்று மாவட்ட தலைநகரங்களிலும், மாவட்ட செயலாளர்கள் தலைமையில் கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக சார்பில் ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி, இன்று மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்துக்கு, தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.

திருச்சியில் முதன்மை செயலாளர் துரைமுருகன் தலைமையில் ஆரப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 1000 பேர் கலந்து கொண்டுள்ளனர். திண்டுக்கல்லில் துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, மத்திய அரசுக்கு எதிராக திமுகவினர் முழக்கமிட்டு வருகின்றனர்.

இதேபோல், நாமக்கல், திருப்பூர், நெல்லை, கோவை, தஞ்சை, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கடலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Response