மத்திய, மாநில அரசுகள் மீது வழக்கறிஞர் சுரேஷ் பாபு ஆவேசம்!

sureh babu

அரியலூர் மாணவி அனிதா இன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து மருத்துவராக வரவேண்டும் என்ற கனவோடு இருந்த மணவை அனிதா நீட் தேர்வால் தனது உயிரையே இழந்துள்ளார்.

இந்த நிலையில், அனிதாவின் தற்கொலை தமிழகம் முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

மாணவி அனிதாவின் வழக்கறிஞர் சுரேஷ் பாபு கூறுகையில்:-

‘நான் கடைசியாக அனிதாவை வழக்கின்போதுதான் பார்த்தேன். அப்போது அவர் பேசுகையில், ‘எங்க பகுதி மக்களுக்கு நான் மருத்துவராகி சேவை செய்யணும். எப்படியாவது நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைத்துவிட வேண்டும்’ என்றார்.

ரொம்ப அதிர்ச்சியாக இருக்கிறது. அனிதாவின் தற்கொலை மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்ட செய்த கொலை. அரசுகள்தான் பொறுப்பு. முதலில் ஒரு கருத்து, வழக்கு நடக்கையில் ஒரு அக்கருத்து என ஏன் மத்திய அரசுக்கு மனமாற்றம் வந்தது என்று தெரியவில்லை.

இன்னமும் அனிதாவை போல பல அனிதாக்களுக்கு மத்திய மாநில அரசுகள் செய்த துரோகத்தின் முடிவு இது.’ என்று வேதனையுடன் தெரிவித்தார்.

Leave a Response