நீட் தேர்வால் விபரீதம்- வழக்கு தொடந்த அரியலூர் மாணவி தற்கொலை!

anith

அரியலூரை சேர்ந்த அனிதா மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத விரக்தியில் இன்று தற்கொலை செய்து கொண்டார்.

ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார் அனிதா. ப்ளஸ் டூ தேர்வு அடிப்படையில் அனிதாவின் கட் ஆப் மதிப்பெண் 196.5 ஆகும். நீட் தேர்வில் 700-க்கு 86 மதிப்பெண்களே பெற்றிருந்தார் அனிதா ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து நன்றாக படித்தவர் அனிதா. அவர் நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். ஆனால் நீட் தேர்வு அடிப்படையிலேயே கவுன்சிலிங் நடைபெற்றது.

இதனால் விரக்தியடைந்த அனிதா, தன்னுடைய மருத்துவ கனவு கலைந்து போனதாக உறவினர்களிடம் கூறி வந்துள்ளர். இந்த நிலையில் மருத்துவ படிப்பு படிக்க இடம் கிடைக்காத காரணத்தால் விரக்தியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Leave a Response