அசல் டிரைவிங் லைசென்ஸ் 4 தேதி வரை கட்டாயமில்லை!

originaldrivinglicens

வாகன ஓட்டிகள் இன்று முதல் அசல் டிரைவிங் லைசென்சுகள் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி, அசல் டிரைவிங் லைசென்ஸ் அவசியம் என கூறியிருந்தார்.

இந்நிலையில், லாரி சம்மேளன சங்கம் சார்பில் அசல் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்னர். இந்த வழக்கு நீதிபதி துரைசாமி முன்னர் விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதி கூறுகையில், வாகன ஓட்டிகள் அசல் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

இந்த உத்தரவு தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும். மோட்டார் வாகன சட்டம் 139ன்படி அசல் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என கூறினார். தொடர்ந்து இந்த வழக்கு பிற்பகலுக்கு விசாரணைக்கு வந்தது.

கேள்வி: அப்போது நீதிபதி, அசல் டிரைவிங் லைசென்ஸ் கட்டாயம் என்ற உத்தரவுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது என கேள்வி எழுப்பினார்.அப்போது அட்வகேட் ஜெனரல் கூறுகையில், இது தொடர்பான வழக்கு 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் உள்ளதால் தடை விதிக்க வேண்டாம்.

அசல் டிரைவிங் லைசென்ஸ் அவசியம் என்பதை இன்று முதல் திங்கட்கிழமை வரை அமல்படுத்த போவதில்லை.

தொடர்ந்து நீதிபதி கூறுகையில்:-

மழை போன்ற இயற்கை சீற்றம் காரணமாக ஆவணங்கள் சேதமடைய வாய்ப்பு உள்ளது. டிரைவிங் லைசென்ஸ் சேதமடைந்தால் யார் பொறுப்பு என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அசல் டிரைவிங் லைசென்ஸ் கட்டாயம் என்பதை வரும் செவ்வாய் கிழமை வரை அமல்படுத்தக்கூடாது என உத்தரவிட்டார்.

Leave a Response