சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதி: முதல்வர் அறிவிப்பு..

சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த ஏற்கனவே தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது என்பதும், சின்னத்திரை படப்பிடிப்பில் 20 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது என்பதும் தெரிந்ததே

ஆனால் இந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்ள சின்னத்திரை தயாரிப்பாளர்கள் விரும்பவில்லை. மேலும் குறைந்தபட்சம் 50 பேர்களை படப்பிடிப்புக்கு அனுமதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து, தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று அதிகபட்சமாக 60 நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை 31.05.2020 முதல் நடத்த அனுமதித்து உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர்.

சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி தலைவரிடமும் அனுமதி பெறுதல் வேண்டும். மேலும், சின்னத்திரை படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அனைவரும் மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Leave a Response