மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கருணாநிதி

f4a8298c-ec53-42fa-b385-b15ec879542bதி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த 15ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக தி.மு.க தலைவர் கருணாநிதி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொண்டை மற்றும் நுரையீரலில் தொற்று ஏற்பட்டிருப்பதால் தொண்டையில் துளை போட்டு சுவாச குழாய் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலை சீராகி வருவதாக சில நாட்களுக்கு முன்பு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நலமாக இருப்பதாக புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டனர்.

இந்நிலையில், பூரண குணமடைந்த கருணாநிதி இன்று மாலை 5 மணியளவில் மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் வீட்டுக்கு புறப்பட்டார்.


 

Leave a Response