விக்ரம் பிரபுவின் ’முடி சூடா மன்னன்’ ’சத்ரியன்’ ஆக மாறியது

mudi-sooda-mannan-first-look-poster‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ஆகிய படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

‘முடி சூடா மன்னன்’ என்ற தலைப்பில் உருவான இப்படம், தற்போது ‘சத்ரியன்’ என மாற்றப்பட்டுள்ளது. படத்தின் பணிகள் முடிந்து சென்சாருக்கு செல்லும்போது எற்கனவே வேறொரு படத்திற்கு இதே தலைப்பில் சென்சார் செய்யப்பட்டதால் இப்படத்தின் தலைப்பை ‘சத்ரியன்’ என மாற்றியுள்ளார்கள்.

‘விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1990ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் சத்ரியன். தற்போது இதே தலைப்பை விக்ரம் பிரபு நடிக்கும் இப்படத்திற்கு வைத்துள்ளனர்.

Leave a Response