ஏப்ரல் 27 ம் தேதி வெளியாகும் விக்ரம் பிரபுவின் “ பக்கா “

பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் மிகப் பிரமாண்டமாகத்  தயாரிக்கும் படம் “பக்கா”

விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்க கதாநாயகிகளாக  நிக்கிகல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் T.சிவகுமார் நடிக்கிறார்.

எஸ்.சரவணன் ஒளிப்பதிவு செய்ய ,C.சத்யா இசை இசைக்க  பாடல் வரிகள் யுகபாரதி மற்றும் கபிலன், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் S.S.சூர்யா.

காமெடி கலாட்டாவாக உருவாகி உள்ள இந்த பக்கா திரைப்படம்  வருகிற வெள்ளிக்கிழமை ஏப்ரல் 27 ம் தேதி  வெளியாக உள்ளது.

Leave a Response