பிரபு நடிக்கும் வணிக விளம்பரத்தில், அரசியல் தலைவர்களின் படங்கள் இடம் பெறுவது சரி தானா?

முன்னாள் முதல்வர்களான காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் கலைஞர் ஆகியோர் இதுவரை எந்த ஒரு வணிக ரீதியான விளம்பர படங்களிலும் நடித்ததில்லை. ஒரு குறிப்பிட்ட வேஷ்டி கம்பெனி விளம்பரத்தில் சம்பளம் வாங்கி சில வருடங்களாக நடித்து வருகிறார் நடிகர் பிரபு.

தற்போது அந்த வேஷ்டி கம்பெனியின் புதியதாக வரும் ஒரு வீடியோ விளம்பரத்தில் பிரபு நடித்து வருகிறார். அந்த விளம்பரத்தில் காமராஜர், அண்ணா துரை, எம்.ஜி.ஆர், கருணாநிதி ஆகிய தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெறுகின்றன.

எந்த ஒரு அரசியல் தலைவர்களின் புகைப்படங்களை வணிக ரீதியான விளம்பர படங்களில் உபயோகிப்பது என்றால் அவர்கள் அந்த வணிக பொருளை உபயோகித்ததாக, அல்லது அந்த பொருளுக்கு விளம்பரம் படுத்தியதாக அந்த தலைவர்களின் தொண்டர்கள் தவறாக புரிந்துக்கொள்வார்கள்.

இத்தகைய வணிக ரீதியான விளம்பரங்களில் தலைவர்கள் படங்களை உபயோகித்தமைக்கு அந்த தலைவர்கள் பதவி வகித்து வந்த கட்சி தலைவர்கள் இதுவரை மவுனம் காப்பது ஏன் என்று அந்த தலைவர்களின் ஒரு சில கட்சி தொண்டர்கள் புலம்புகிறார்கள்.

Leave a Response