லண்டன் போலீசில் மாட்டிக்கொண்ட ஸ்ரேயா

‘பாஸ் புரொடக்‌ஷன்ஸ் கார்ப்பரேசன்’ &’மெட்ரோ நெட் மல்டிமீடியா’ பட நிறுவனங்கள் இணைந்து வழங்க J.ஜெயகுமார் தயாரிக்கும் படம் “சண்டகாரி”. R. மாதேஷ் இயக்குகிறார் .இந்தப்படத்தில் ஸ்ரேயா ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தின் அதிகாரியாக நடிக்கிறார. விமல், ஸ்ரேயாவின் நிறுவனத்தில் எஞ்சினியராக பணிபுரிபவராக நடிக்கிறார். இந்தப்படத்திற்காக லண்டனில் உள்ள மிகப்பெரிய ஏர்போர்ட்டான ஸ்டேன்போர்ட் ஏர்போர்ட்டில் விமல் – ஸ்ரேயா, சத்யன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது.

அப்போது பாதுகாப்பு மிகுந்த குடியுரிமை பகுதியை ஸ்ரேயா தாண்டி போனார். உடனே அங்கிருந்த துப்பாக்கி ஏந்திய லண்டன் போலீசார் அதிரடியாக ஸ்ரேயாவை சூழ்ந்து கொண்டனர். “எப்படி உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியுரிமை பகுதியை தாண்டி வந்தீர்கள” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைக்க, உடன் நடித்துக்கொண்டிருந்த விமல் நிலமையின் விபரீதத்தை உணர்ந்து தன்னிடம் இருந்த உரிய ஆவணங்களை காட்டி படபிடிப்ற்காக வந்து இருக்கிறோம் என்பதை விளக்க போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஸ்ரேயாவை புன்னகையுடன் அனுப்பி வைத்தனர்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் தயாராகிக் கொண்டிருக்கும் “சண்டகாரி” படத்தை R.மாதேஷ் இயக்குகிறார். இப்படத்தில் பிரபு, சத்யன், கே.ஆர், விஜயா, ரேகா, உமா பத்மநாபன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
“மகதீரா” படத்தில் வில்லனாக நடித்த தேவேந்தர் சிங் இதில் வில்லனாக நடிக்கிறார்.

ஜெயபாலன் ஜெயக்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார்.

Leave a Response