அழுத்தமான கதைக்களத்தோடு உருவாகும் போலீஸ் படம் அசுரவம்சம்

‘லட்சுமி வாசந்தி புரொடக்ஷன்’ சார்பாக A.வெங்கட்ராவ் மற்றும் ‘S பிலிம்ஸ் கார்ப்பரேஷன்’ சார்பாக சேலம் B.சேகர் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் “அசுரவம்சம்”
2018 ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற “நட்சத்திரம்” படத்தின் தமிழாக்கமே இந்த “அசுரவம்சம்”
இந்த படத்தில் சந்தீப் கிசன் கதாநாயகனாக நடித்துள்ளார், கதாநாயகியாக ரெஜினா கசான்ட்ரா நடித்துள்ளார். மற்றும் பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா சாய் தருண் தேஜ், பிரகயா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசை பிம்ஸ் சிசிரோலேயோ. நடனப்பயிற்சிக்கு ஸ்ரீதர் பொறுப்பேற்றுள்ளார். கிருஷ்ணவம்சி இப்படத்தை இயக்கியுள்ளார்.

மிக அழுத்தமான கதை அம்சத்தோடு உள்ள ஒரு போலீஸ் படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு என்பவர்களுக்கு நல்ல விருந்தாக ஒரு போலீஸ் படம் தான் இந்த “அசுரவம்சம்”. கான்ஸ்டபிள் மகனாக இருக்கும் சந்தீப் கிசனுக்கு போலீசாக வேண்டும் என்பது லட்சியம். அந்த லட்சியத்தை கமிஷ்னரின் மகன் ஒரு பிரச்சனையில் சிதறடித்து விடுகிறான். கனவு கலைந்தாலும் நிலைகுலையாத சந்தீப் கிசன் காவல் அதிகாரியின் கெட்டப்போடு சமூகப் பிரச்சனைகளை மாஸாக கையாள்கிறான். ஒரு கட்டத்தில் சமூகத்தில் நடக்கும் மிக முக்கியமானப் பிரச்சனைக்கு ஹெட் ஆக கமிஷ்னர் மகனே இருப்பதைக் கண்டு வெகுண்டெழும் ஹீரோ, கமிஷ்னர் மகனை எப்படி ஹீரோ எதிர்கொள்கிறான் என்பதும் தான் இந்தப்படத்தின் பரபரப்பான திரைக்கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப்படத்தில் பாடல்கள் மிக முக்கியம் வாய்ந்ததாக இருக்கிறது. கவிஞர் சே வரலெட்சுமி மிகச்சிறப்பான பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார்.

Leave a Response