மாதேஷ் இயக்கத்தில் ஸ்ரேயா – விமல்…

பாஸ் புரொடக்‌ஷன்ஸ் கார்ப்பரேசன் & மெட்ரோ நெட் மல்டிமீடியா பட நிறுவனங்கள் இணைந்து வழங்க J.ஜெயகுமார் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படத்திற்கு “சண்டகாரி – The Boss” என்ற தலைப்பு வைத்துள்ளார்கள்..

இந்த படத்தில் கதாநாயகனாக விமல், கதாநாயகியாக ஸ்ரேயா நடித்துள்ளனர்.
முக்கியமான வேடத்தில் பிரபு, சத்யன், மற்றும் கே.ஆர்.விஜயா, ரேகா, கிரேன் மனோகர், மகாநதி சங்கர், உமா பத்மநாபன் மற்றும் பல முன்னனி நடிகர்கள் நடிகைகள் நடிக்கின்றனர். சூப்பர் ஹிட்டான மகதீரா படத்தில் வில்லனாக நடித்த தேவேந்தர் சிங் கில் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் .

இயக்குனர் ஆர்.மாதேஷ் இதற்கு முன்பு விஜய் நடித்த மதுர, பிரஷாந்த் நடித்த சாக்லட், விஜய்காந்த் நடித்த அரசாங்கம், வினய் நடித்த மிரட்டல், திரிஷா நடித்த மோகினி ஆகிய படங்களை இயக்கியவர்.

இமத “சண்டகாரி – The Boss” திரைப்படம், மலையாளத்தில் திலீப், மம்தா மோகன் தாஸ் நடித்து, ஜீத்து ஜோசப் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற ‘மை பாஸ்’ என்ற படத்தை தழுவி எடுக்கப் படும் படமாகும்.

முழுக்க முழுக்க குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையில் காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகி வரும் சண்டக்காரி படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது

இப்படத்தின் ஒளிப்பதிவை குருதேவ் செய்ய, தினேஷ் படத்தொகுப்பினை மேற்கொள்கிறார். கபிலன் மற்றும் விவேக் பாடல்கை எழுத, அம்ரீஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் திரைக்கதை அமைத்து, இயக்குகிறார் R.மாதேஷ்.

Leave a Response