கள்ள ரூபாய் நோட்டுகள்தான் தீவிரவாதத்துக்கு தீனி போட்டுக்கொண்டிருந்தது ; பிரதமர் மோடி


pm-modi-in-gujarat_650x400_71481352459ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினால் ஏற்பட்ட அனைத்து பிரச்னைகளும் 50 நாட்களில் முடிவுக்கு வரும் என்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உறுதி அளித்துள்ளார்.

குஜராத் மாநிலம் பனஸ்கந்த் பகுதியில் ரூ.350 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட சீஸ் உற்பத்தி ஆலையை துவக்கி வைப்பதற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, துவக்க விழாவில் மக்களிடையே பேசுகையில், ரூபாய் நோட்டு விவகாரத்தால் நாடாளுமன்றம் முடக்கப்படுவதற்கு குடியரசுத் தலைவர் வேதனை தெரிவித்துள்ளார்.

அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் மறுப்பதால் மக்கள் மன்றத்தில் பேசுகிறேன்.

மின்னணு பண பரிமாற்றத்துக்கு நாட்டு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நேர்மையான மக்கள் மத்திய அரசை ஆதரிக்கின்றனர்.

கள்ள ரூபாய் நோட்டுகள்தான் தீவிரவாதத்துக்கு தீனி போட்டுக்கொண்டிருந்தது. தீவிரவாத செயல்களுக்கு கள்ள ரூபாயே கைகொடுத்தது.

அந்த தீவிரவாதிகளை எதிர்த்து நான் போராடிக் கொண்டிருக்கிறேன். ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதன் மூலம் தீவிரவாதத்தின் முதுகெலும்பு உடைக்கப்பட்டுள்ளது.

பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பிரச்னைகள் அனைத்துமே 50 நாட்களில் முடிவுக்கு வந்து விடும். மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், எதிர்கால சந்ததியினர் நிச்சயம் பயனடைவார்கள் என்று பிரதமர் மோடி பேசினார்.


 

Leave a Response