பிரதமர் மோடிக்கு, சுப்பிரமணியசாமியின் அன்பு கட்டளையா அல்லது மறைமுக மிரட்டலா?

பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி, பாஜக ஆட்சியில் இருக்கிறதோ இல்லையோ அவ்வப்போது ஏதாவது அறிக்கையோ அல்லது வழக்கையோ தொடுத்து தன்னை நிலைநிறுத்தி கொள்வது அவருடைய வழக்கம்.

அன்று ஜெயலலிதா மீது டான்சி ஊழல் வழக்கு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் மீது ஏர்செல் மெக்சிஸ் வழக்கு, ராமர் செத்து பாலம் வழக்கு, அயோதியாவில் ராமர் கோவில் கட்டவேண்டி வழக்கு என பல வழக்குகளை தானாக முன்வந்து பதிவிட்டு அதற்கு தானாகவே வாதிடுவதும் அவருடைய வழக்கம்.

தற்போது தான் இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுற்று, பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இன்னும் சில தினங்களில் நரேந்திர மோடி மீண்டும் இரண்டாவது முறையாக இந்த பிரதமராக உள்ளார்.

இந்த சூழலில் பாஜக’வின் மூத்த தலைவரான சுப்பிரமணியசாமி ராமர் கோவில் மற்றும் ராம் சேது திட்டம் பற்றி தன்னுடைய டுவிட்டர் சமுகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “சென்ற 5 ஆண்டுகளிலிருந்து ராமர் கோவில் பணி முடிக்கப்படாமல் உள்ளது. நான் உச்ச நீதிமன்றம் சென்று, ராமர் பிறந்த இடம் என்று நம்பப்படும் இடத்தில் நான் வழிபட எனக்கு உரிமை உள்ளது என்று ஒரு புதிய மனுவை அளிக்கும் வரை இந்த பணி கிடப்பில் போடப்பட்டிருந்தது. கோவில் கட்ட தேசியமயமாக்கப்பட்ட அந்த நிலத்தினை கோவில் கட்டுவதற்கு ஒப்படைக்குமாறு நரேந்திர மோடி அரசை கேட்டு கொள்கிறேன்.

ஜூலை 1, அன்று நான் உச்ச நீதிமன்றம் வந்து, ராம சேது என்பது சுமார் 10,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரிய நினைவுச்சின்னம் மட்டும் பொறியியல் வியப்பு என்பதை நரேந்திர மோடி அரசு அறிவிக்க வேண்டும் என்ற ஒரு நீதிமன்ற ஆணையை நான் பெறவிற்கிறேன். நரேந்திர மோடி அதற்குள் இந்த ஆணையை ஜூன் மாதம் பிறப்பித்து, கூடிய விரைவில் அறிவித்தால் நன்றாக இருக்கும்.” என பிரதமர் நரேந்திர மோடிக்கு அன்பு கட்டளையாகவும் மறைமுகமான மிராட்டலாகவும் தனது டுவிட்டர் பக்கதித்தில் சுப்பிரமணியசாமி பதிவிட்டுள்ளார்.

Leave a Response