கரோனா வைரஸின் தாக்கமானது இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் மக்கள் அதிகளவு தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். மக்களை காப்பாற்றும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும், நோயின் பரவல் தன்மை நினைத்ததை விட அதிகளவு இருக்கிறது.
இதனால் ஊரடங்கும் ஐந்தாவது கட்டமாக தளர்வுகளுடன் நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட நபர்களை காப்பாற்றும் பணியில் மருத்துவர்களும், நோய்பரவளை தடுக்கும் பொருட்டு சுகாதாரத்துறையினரும் செயல்பட்டு வருகின்றனர். மருத்துவர்கள் மற்றும் செயலியர்கள், சுகாதார துறையினர் உலகளவிலான பாராட்டுகளை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய பிரதமர் மோடி மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் போது, கொரோனா என்பது கண்களுக்கு தெரியாது எதிரி ஆகும். கொரோனா விஷயத்தில் மருத்துவர்களே முன்னணி வீரர்கள் ஆவார்கள்.
கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் கட்டாயம் வெற்றி பெறுவது உறுதி என்று தெரிவித்தார்.