பிரபல இயக்குனருடன் கை கோர்க்கும் சியான் விக்ரம்..

ஜிகிர்தண்டா, பேட்டை படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் தனுஷை வைத்து ஜகமே தந்திரம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரும் நிலையில் உள்ளது.

ஜகமே தந்திரம் படம் முடிந்த நிலையில் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் அடுத்த படத்தை பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்பாராஜின் அடுத்த படத்தில் சியான் விக்ரம் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் சியான் விக்ரமின் 60 ஆவது படமாக இருக்கும்,

ஏற்கனவே “பொன்னியின் செல்வன்”, “கோப்ரா” என இரு பெரிய படங்களில் பணிபுரிந்து இருக்கும் விக்ரம் கார்த்திக் சுப்பாராஜ் உடன் இணைந்து இருப்பது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தை செவென் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் அவர்கள் தயாரிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்பாராஜ் மற்றும் சியான் விக்ரம் ஆகிய இருவரும் தேசிய விருது பெற்றவர்கள் என்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படம் கமர்சியல் அம்சங்களை வைத்து எடுக்கப்படுமா அல்லது கார்த்திக் சுப்பாராஜ் பாணியில் ஜிகர்தண்டா போன்ற படத்தை போல் இருக்குமா எனும் ஆர்வத்தை ரசிகர்களை தூண்டியுள்ளது.

Leave a Response